அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பிய கணவர்- பகீர் தகவல் கூறிய சீரியல் நடிகை மோனிஷா
நடிகை மோனிஷா
விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான பச்சைக்கிளி போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை மோனிஷா.
சீரியல்களில் பிஸியாக நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் தொடர் பக்கமே காணவில்லை. ஆனால் தனது இன்ஸ்டாவில் ஹோம் டூர், வீட்டில் வளரும் காய்கறி போன்ற விஷயங்களை வீடியோவாக வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

செகண்ட் லவ்
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருந்து வந்தவர் இப்போது விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் செகண்ட் லக் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் நடிகை மோனிஷா கடந்த காலத்தில் கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து கூற அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த நிகழ்ச்சியில் மோனிஷா பேசும்போது, என் முன்னாள் கணவர், நானும் அவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், நான் உடை மாற்றும் போது எடுத்த போட்டோஸ் என அனைத்தையும் அவர் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் என்னிடமே வந்து நான் அந்த போட்டோக்களை பார்த்தேன் என்று சொன்னார்கள்.

இப்போது நான் தூங்கும் போது கூட டிரஸ் ஏதும் விலகி இருக்கா, யாராச்சும் போட்டோ எடுத்துருவாங்களோன்று நெனச்சி பயந்துகிட்டே தான் தூங்குவேன் என கண்ணீர் விட்டு எமோஷ்னலாக பேசியுள்ளார்.
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri