சித்தி சீரியல், நாயகன் படம் என நடித்த நடிகை நீனாவை நியாபகம் இருக்கா?- குழந்தைகளுடன் அடையாளமே தெரியலையே
நடிகை நீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் வெற்றி நாயகியாக வலம் வந்தவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை நீனா.
1990ல் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான கேளடி கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இவரது படங்கள் முக்கியமாக கூற வேண்டும் என்றால் ஹிட் பாடலாக இருக்கும் கற்பூர பொம்மை ஒன்று எனும் அம்மா சென்டிமென்ட் பாடலில் அழகாக நடித்திருப்பார்.
கமல்ஹாசனின் நாயகன், அஜித்துடன் ராசி, பிரகாஷ் ராஜுடன் விடுதலை போன்ற முக்கியமான படங்களிலும் நடித்துள்ளார்.
பின் சின்னத்திரை பக்கம் வந்த இவர் சித்தி தொடரில் காவேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார், ஆனால் அதன்பிறகு இவரை சினிமா பக்கமே காணவில்லை.
லேட்டஸ்ட் க்ளிக்
திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆன நீனாவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அட நாம் பார்த்த நீனாவா இது அடையாளமே தெரியலையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபலமான பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் திடீர் மரணம்- கடும் சோகத்தில் ரசிகர்கள்