தனக்கு கொடுத்த விருதை Dance Jodi Dance போட்டியாளருக்கு கொடுத்த சீரியல் நடிகை... எமோஷ்னலான வீடியோ
Dance Jodi Dance 3
சாதாரண எளிய மக்களுக்கு தங்களது திறமைகளை காட்டி சாதிக்க ஒரு மேடை அமைவது என்பது கடினமான விஷயமாக இருந்தது.
ஆனால் இப்போதெல்லாம் கலைஞர்களின் திறமைகளை வெளிக்காட்ட நிறைய மேடைகள் வந்துவிட்டன, அதில் தொலைக்காட்சிகளில் சொல்லவே வேண்டாம்.
அப்படி இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் மேடையில் நடந்த ஒரு எமோஷ்னலான சம்பவம் தான் வைரலாகி வருகிறது.
என்ன விஷயம்
நடனத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் நிகழ்ச்சி Stars Round நடந்துள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போட்டியாளர்களுடன் நடனம் ஆடியுள்ளனர்.
அப்படி பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி, பஞ்சமியுடன் இணைந்து நடனம் ஆடினார். பின் பிரியங்கா பேசுகையில், எனக்கு ஜீ தமிழில் Face Of Tamilnadu என்ற விருது கொடுக்கப்பட்டது, பஞ்சமி கஷ்டத்தை பற்றி எனக்கு கூறினார்கள், கஷ்டமாக இருந்தது.
ஆனால் இனி உங்களின் கஷ்டம் எல்லாம் போனது, நீங்கள் தான் மக்களின் தேர்வு இந்த விருதை நான் உங்களுக்கு கொடுக்கிறேன் என தனது விருதை பஞ்சமிக்கு கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.