2வது திருமணம் குறித்து ஓபனாக கூறிய பிரபல நடிகை ரச்சிதா... வீடியோவுடன் இதோ
நடிகை ரச்சிதா
தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.
கன்னட சினிமாவில் இருந்து தமிழ் பக்கம் வந்தவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் முதன்முறையாக அறிமுகமானார், அதில் கருப்பு நிற லுக்கில் நடித்து அசத்தினார். அதன்பின் சரவணன் மீனாட்சி என்ற தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்தவர் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார்.

விஜய் தொலைக்காட்சியில் இந்த சீரியல் மூலம் சிறந்த நாயகிக்கான விருதுகளை பெற்றுள்ளார். தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு விளையாடினார்.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்
மறுமணம்
ரச்சிதா தற்போது சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் கலக்க தொடங்கிவிட்டார். கன்னடம், தமிழ் என பல மொழிகளில் படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.

இவர் பிரபல சின்னத்திரை நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்தார், ஆனால் சில பிரச்சனைகளால் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரச்சிதா மறுமணம் குறித்து பேசியுள்ளார்.

என்னைப் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு வதந்தி வந்து கொண்டே தான் இருக்கும். அதேபோல் ஒவ்வொரு ஏப்ரல், மே மாதத்தில் எனக்கு கல்யாணம் என்ற பேச்சு வரும், ஆனால் எந்த மே மாதம் என்று மட்டும் யாரும் சொல்ல மாட்டாங்க, எனக்கே தெரியல என சிரித்தபடி மறுமணம் குறித்து பேசியுள்ளார்.