புதிய Projectல் கமிட்டாகியுள்ள சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான பவித்ரா... முழு விவரம்
பவித்ரா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்த பிரபலங்கள் அனைவருமே மக்களிடம் மிகவும் பிரபலம்.
2013ம் ஆண்டு மகாபாரதம் தொடரில் நடிக்க தொடங்கியவர் அதன்பின் ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்டி, பகல் நிலவு, ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் என தொடர்ந்து தரமான சீரியல்களாக நடித்து வந்தார்.
கடந்த வருடம் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு 3வது ரன்னராக வந்தார்.

புதிய புராஜக்ட்
பிக்பாஸ் பிறகு ஜனனி அடுத்து எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகாமல் இருந்தார்.
நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியிடுவது, தனியார் நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது என பிஸியாக இருந்தார். இந்த நிலையில் பவித்ரா ஜனனி புதிய வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.
Regai என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடர் Zee 5ல் வரும் நவம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளதாம்.