பிக்பாஸ் வீடு பெண்களுக்கு, ஏற்புடையது அல்ல.. முன்னாள் போட்டியாளர் பவித்ரா பேட்டி!
பவித்ரா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்த பிரபலங்கள் அனைவருமே மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர்கள். அந்த வகையில், 2013ம் ஆண்டு மகாபாரதம் தொடரில் நடிக்க தொடங்கியவர் பவித்ரா.
அதன்பின் ஆபிஸ், கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்டி, பகல் நிலவு, ராஜா ராணி, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் என தொடர்ந்து தரமான சீரியல்களாக நடித்து வந்தார்.
சீரியல் மூலம் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைக்க கடந்த வருடம் பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்டு 3வது ரன்னராக வந்தார்.

ஏற்புடையது அல்ல!
இந்நிலையில், சமூக வலைத்தளம் குறித்து பவித்ரா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " சீரியல் நடிகர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம், நாட்டில் இவ்வளவு சீரழிவுகள் நடக்கும் நிலையில், பிக்பாஸ் மீது மட்டும் குற்றம்சாட்டுவது ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீது சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்களுக்கு மத்தியில் பவித்ராவின் இந்த கருத்து, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
