புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை பாவனி ரெட்டி- அவரே வெளியிட்ட படப்பிடிப்பு போட்டோ
நடிகை பாவனி ரெட்டி
தமிழ் சின்னத்திரையில் ஹிட் சீரியல்கள் நடித்து பிரபலமானவர். ரெட்டைவால் குருவி, சின்னதம்பி, ராசாத்தி, தவனை முறை வாழ்க்கை என தொடர்கள் நடித்துவந்த இவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.
பிக்பாஸில் கலந்துகொண்டபோது அதில் ஒரு போட்டியாளராக இருந்த நடன கலைஞர் அமீருடன் காதல் ஏற்பட விரைவில் அவர்களும் திருமண பந்தத்தில் இணைய உள்ளார்கள்.
அண்மையில் இருவரும் சேர்ந்து ஒரு சூப்பரான காரையும் வாங்கியுள்ளனர்.
புதிய சீரியல்
பிக்பாஸ் பிறகு எந்த ஒரு தொடரிலும் கமிட்டாகாத பாவனி ரெட்டி தற்போது புதிய தொடர் ஒன்றில் கமிட்டாகி இருப்பதாக தெரிகிறது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவர் போட்டோ வெளியிட்டுள்ளார், ஆனால் என்ன தொடர் என்பதையெல்லாம் அவர் தெரிவிக்கவில்லை.
ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீசனாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
