திருமணத்திற்கு பின் தனது கணவருடன் நெருக்கமாக போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை பாவ்னி.. அழகிய ஜோடி
பிக்பாஸ்
பிக்பாஸ் சரித்திரத்தில் இணையாத காதல் ஜோடிகள் இல்லை எனலாம். ஹிந்தியோ, தமிழியோ எந்த மொழி பிக்பாஸ் எடுத்தாலும் அதில் காதல் ஜோடி இருப்பார்கள்.
சிலர் வெளியே வந்து காதலித்து திருமணம் செய்துள்ளனர், பலர் நிகழ்ச்சியில் மட்டுமே காதல் வந்து காதலித்திருப்பார்கள். தற்போது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நிஜ வாழ்க்கையில் இணைந்துள்ளார்கள் அமீர்-பாவனி.
போட்டோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்களை பற்றி கிசுகிசு இருந்தாலும் வெளியே வந்து தங்களை நிஜ காதலர்களாக மக்களிடம் அடையாளப்படுத்தினார்கள்.
லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தவர்கள் இப்போது திருமணம் செய்து இணைந்துள்ளார்கள்.
கடந்த ஏப்ரல் 20ம் தேதி இவர்களுக்கு படு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த நிலையில் பாவ்னி-அமீர் இருவரும் நெருக்கமாக ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த போட்டோவை பாவனி வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.