சிம்பிளாக நடந்து முடிந்த சீரியல் நடிகை ப்ரீத்தியின் வளைகாப்பு.. யாரெல்லாம் வந்துள்ளார்கள் பாருங்க
கிஷோர்
கடந்த 2009ம் ஆண்டு வெளியான பசங்க படம் மிகப்பெரிய ஹிட். இப்படத்தில் அதிகமாக குழந்தைகளுக்கு இடையில் நடக்கும் சண்டைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவை தான் காட்டப்படும்.
இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் தான் கிஷோர். இப்படத்தை தொடர்ந்து கோலி சோடா, வஜ்ரம், 6 அத்தியாயம், சகா, ஹவுஸ் ஓனர், உறுதிகொள் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் தெலுங்கிலும் நடித்துள்ளார்.
இவர் பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆபீஸ் தொடர் மூலம் நடிக்க தொடங்கிய ப்ரீத்தி லட்சுமி கல்யாணம், வள்ளி, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல, பிரியமானவளே, கோபுரங்கள் சாய்வதில்லை என பல சீரியல்களில் நடித்திருந்தார்.
வளைகாப்பு
பெற்றோர்கள் சம்மதத்துடன் கிஷோர்-ப்ரீத்தி இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இந்த நிலையில் இவர்கள் கர்ப்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன் அறிவித்த நிலையில் வளைகாப்பு நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.