பெற்றோர்கள் கூட இல்லாமல் திடீரென திருமணம் நடந்தது ஏன்?- ரோஜா சீரியல் புகழ் நடிகை பிரியங்கா
ரோஜா சீரியல்
சன் தொலைக்காட்சியில் கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்ட ரோஜா சீரியல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடி சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது.
இந்த தொடரை முடித்த கையோடு சிபு சூரியன் விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா 2 தொடரில் நாயகனாக கமிட்டாகி நடிக்க பிரியங்கா ஜீ தமிழில் சீதா ராமன் என்ற தொடரில் நடித்து வருகிறார்.
திருமணம்
பிரியங்கா 2018ம் ஆண்டு தான் காதலித்து வந்த தெலுங்கு சீரியல் நடிகர் ராகுலை நிச்சயதார்த்தம் செய்தார். அதன்பிறகு இவர்களது கல்யாணம் மட்டும் தள்ளிக்கொண்டே போனது.
இந்த நிலையில் திடீரென பிரியங்கா, ராகுலை மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். உடன் அவரது பெற்றோர்கள் கூட இல்லை. இதுகுறித்து ஒரு பேட்டியில் பிரியங்கா, விசா போன்ற பிரச்சனைகளால் தான் எனது திருமணத்திற்கு பெற்றோர்களால் வர முடியவில்லை.
ஆனால் அவர்கள் எனது திருமணத்தால் சந்தோஷத்தில் உள்ளார்கள் என கூறியுள்ளார்.
விவாகரத்து பெற்று தனியாக வாழும் எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியாவின் மகனை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்

துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
