ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவிற்கு விஜய் டிவி கொடுத்த பெரிய வாய்ப்பு- ஆனால்?
ரோஜா தொடர்
சன் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு தொடங்கப்பட்டு ஹிட்டாக ஓடிய தொடர் ரோஜா. 1300க்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஓடிய இந்த தொடரை பாதி பாதியாக 3 இயக்குனர்கள் வரை இயக்கியுள்ளார்கள்.
சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்தால் சில காரணங்களால் முடித்துவிட்டார்கள். தற்போது இதில் நாயகனாக நடித்த சிப்பு விஜய்யில் பாரதி கண்ணம்மா 2 தொடரில் நடிக்கிறார். பிரியங்கா ஜீ தமிழில் சீதா ராமன் என்ற தொடரில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பிரியங்கா கொடுத்த பேட்டி
புதிய தொடரில் கமிட்டாகியுள்ள நடிகை பிரியங்கா தனது சினிமா பயணம் கொடுத்து பேட்டியளித்துள்ளார். சீதா ராமன் தொடர் ஆரம்பம் முதலே படு ஜோராக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒரு ப்ராஜெக்டில் கமிட்டானால் அதை முழுவதும் முடித்து தான் வெளியே வருவேன்.
ரோஜா தொடர் போய்க் கொண்டிருக்கும் போது விஜய்யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இந்த தொடரால் அந்நிகழ்ச்சி வாய்ப்பை நிராகரித்து விட்டேன் என கூறியுள்ளார்.
3 நாள் முடிவில் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது தெரியுமா?