பிக்பாஸ் பிரபலமும், சீரியல் நடிகையுமான ரச்சிதாவின் தந்தை மரணம்- பிரபலத்தின் சோகமான பதிவு
சீரியல் நடிகை
பிரிவோம் சந்திப்போம் தொடரில் தொடங்கி சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை, கடைசியாக பிக்பாஸ் என தொடர்ந்து சின்னத்திரையில் பயணித்து வருபவர் தான் நடிகை ரச்சிதா.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒரு ஷாக்கிங் தகவலை ரசிகர்களுக்கு அறிவித்தார். அதாவது அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகர் தினேஷை பிரிந்து இருப்பதை உறுதி செய்தார்.
தினேஷ் நிறைய பேட்டிகளிலும் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் தற்போது பிரிந்து இருக்கிறோம் என்று தான் கூறியிருந்தார்.
சோகமான சம்பவம்
இனி தனக்கு எல்லாமே தனது அம்மா-அப்பா மட்டும் தான், அவர்களை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
இந்த நிலையில் நடிகை ரச்சிதாவின் தந்தை ருஷிகுமார் இன்று உயிரிழந்துள்ளார்.
தனது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரச்சிதா இந்த சோக செய்தியை கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.