தனது 22வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய சீரியல் நடிகை ரவீனா... அவர் வெளியிட்ட கூல் போட்டோஸ்
நடிகை ரவீனா
சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் சின்னத்திரை பக்கம் வந்தவர் தான் நடிகை ரவீனா தாஹா.
அவர் சிறப்பு வேடத்தில் நடித்தவர் பின் ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா தொடரில் நடித்தார்.
அதன்பின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்தவர் வெப் தொடர்களில் நடித்தார். படங்களிலும் அதிகம் நடித்துள்ள ரவீனா நிறைய நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.
கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சிந்து பைரவி தொடரில் கமிட்டானவர் பின் சில காரணங்களால் புரொமோ மட்டும் நடித்து வெளியேறினார்.
பிறந்தநாள்
இதனால் அவருக்கு சின்னத்திரையில் நடிக்க கொஞ்சம் பிரச்சனை ஏற்பட்டது. இப்போது அவர் அதிகம் போட்டோ ஷுட்கள் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார்.
இந்த நிலையில் நடிகை ரவீனா தாஹா தனது 22வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதற்கான சூப்பர் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள்.