எனது 24 வயதில் வாழ்க்கையே போச்சு- சீரியல் நடிகை ரிஹானா எமோஷ்னல் பேச்சு
சீரியல் நடிகை
சன் தொலைக்காட்சியில் ஆனந்த ராகம், ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க போன்ற சீரியல்களில் நடித்து வருபவர் தான் நடிகை ரிஹானா. சின்னத்திரையில் இருக்கும் மிகவும் தைரியமான நடிகைகளில் இவரும் ஒருவர்.
அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட விஷ்ணுகாந்த்-சம்யுக்தா பிரச்சனையில் கூட நடிகருக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
எமோஷ்னல் பேச்சு
அக்னி பறவை என்ற தொடரில் நான் டீச்சராக நடித்து வந்தேன், அதன்பின் சன் தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க வாய்ப்பு வந்தது.
அப்போது எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சீரியலில் நடிக்க முடியாமல் போக நான் செய்து வந்த மெஸ் வேலையை தொடர்ந்து செய்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை வந்ததால் நடிப்பது என முடிவு எடுத்தேன்.
இதனால் எனக்கும் கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தோம். 18 வயதில் எனக்கு கல்யாணம், 19 வயதில் குழுந்தை, 24 வயதில் இன்னொரு குழந்தை என இப்படி திரும்பி பார்ப்பதற்குள் என் வாழ்க்கையில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது என எமோஷ்னலாக பேசியுள்ளார்.
பிக்பாஸ் 7வது சீசனின் Logo ரெடியானது- இதோ பாருங்கள்