தனுஷ் படத்தை மிஸ் செய்த சிறகடிக்க ஆசை நடிகை கோமதி பிரியா.. சூப்பர்ஹிட் படமாச்சே!
கோமதி பிரியா
சினிமா நடிகைகள் போன்று தற்போது சீரியல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் செம ரீச் உள்ளது. விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை தூக்கி நிறுத்திவரும் தொடர் சிறகடிக்க ஆசை.
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கோமதி பிரியா.
முதலில் தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்த இவரின் நடிப்பை கண்டு தமிழ் சினிமா சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சூப்பர்ஹிட் படமாச்சே!
இந்நிலையில், படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்து அதை நிராகரித்து விட்டதாக முன்பு பேட்டி ஒன்றில் கோமதி பிரியா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, இயக்குநர் வெற்றிமாறனின் அசுரன் திரைப்படத்தை தான் கோமதி ரிஜெக்ட் செய்துள்ளார்.
அப்படத்தில் தனுஷின் இளம் வயது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க கோமதி பிரியாவை ஆடிஷன் செய்து செலக்ட் செய்து இருந்தாராம் வெற்றிமாறன். ஆனால் அப்போது தெலுங்கு சீரியலில் பிஸியாக நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை ரிஜெக்ட் செய்து விட்டாராம்.

உக்ரைனுக்கான இராணுவத் திட்டங்களை வெளிப்படுத்திய கெய்ர் ஸ்டார்மர்: தயார் நிலையில் நேச நாடுகள் News Lankasri

Baakiyalakshmi: இனியாவிற்கு திடீர் திருமண ஏற்பாடு... திகைப்பில் பாக்கியா! ஆனால் நடந்த டுவிஸ்ட் Manithan
