ரயிலில் சென்ற சின்னத்திரை நடிகைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! போலீஸே அப்படி செய்தாரா
சென்னையை சேர்ந்த சின்னத்திரை நடிகை ஒருவர் ரயிலில் பயணித்தபோது நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சீரியல் நடிகை ரேணுகா என்பவர் சென்னை சூளைமேட்டில் வசித்து வருகிறார். அவர் கடந்த ஞாயிறு அன்று மைசூரில் இருந்து சென்னைக்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திருக்கிறார்.
சென்னை ஆவடி அருகில் வந்தபோது ஒரு நபர் அவரது கைப்பையை எடுத்துக்கொண்டு செல்ல முயற்சித்து இருக்கிறார். அதை பார்த்துவிட்ட நடிகை உடனே அவனை பிடித்து பையை கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.
அவன் பையை வெளியில் தூக்கி வீச, நடிகை ரேணுகா உடனே அபாயா சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி இருக்கிறார். அதன் பின் கீழே இறங்கி சென்று நகை இருந்த அந்த பையை எடுத்து வந்திருக்கிறார்.
கைது
ரயில்வே போலீசிடம் அவனை பிடித்து கொடுத்திருக்கிறார் நடிகை.
இந்த திருட்டு வேலையை செய்தது வாலாஜாவை சேர்ந்த வசந்தகுமார் என்பது தெரியவந்தது. அவர் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரை தற்போது போலீஸ் சஸ்பெண்ட் செய்திருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது.