மஞ்சக்காட்டு மைனாவாக மஞ்சள் நிற புடவையின் அழகில் மயக்கும் சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.... இதோ போட்டோஸ்
ரேஷ்மா பசுபுலேட்டி
விமான பணிப்பெண்ணாக தனது பயணத்தை தொடங்கியவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.
பின் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் சன் தொலைக்காட்சி பக்கம் வந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதைத்தொடர்ந்து உயிர்மெய், சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர் என அடுத்தடுத்த சீரியல்களில் நடித்தார்.

அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தவர் இனிமையான நாட்கள், வேலையினு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2, மணல் கயிறு 2 போன்ற படங்களில் நடித்தார்.
வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கியவர் இப்போது ஜீ தமிழில் கார்த்திகை தீபம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

போட்டோஸ்
நடிப்பை தாண்டி போட்டோ ஷுட்டிலும் செம பிஸியாக உள்ளார். இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா விதமான உடைகளில் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

அண்மையில் மஞ்சள் புடவையில் அழகிய புகைப்படங்களை பதிவிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். இதோ போட்டோஸ்,






