மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ
சீரியல்
வெள்ளித்திரையை தாண்டி இப்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் மக்களிடம் செம வரவேற்பு பெற்று வருகிறது.
மாமியார் மருமகள் சண்டை, குடும்ப சண்டை என வழக்கமான கதைக்களத்தை கொண்ட சீரியல்களோடு கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடனும், இளசுகளை கவரும் வண்ணம் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகை ரேவதி
சன் டிவியில் 90களில் கலக்கிய ஒரு சீரியலில் நடித்த நடிகையின் போட்டோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஒரு காலத்தில் சன் டிவியில் அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற மெட்டி ஒலி பாடலை கேட்டால் போதும் உடனே தாய்மார்கள் தொலைக்காட்சி பக்கம் ஆஜர் ஆகிவிடுவார்கள், அந்த அளவிற்கு சீரியல் ஹிட். இந்த கதையில் வந்த 5 அக்கா-தங்கைகளில் ஒருவராக நடித்தவர் தான் ரேவதி.
மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமான ரேவதி தொடர்ந்து கோலங்கள், நிம்மதி, கிரிஜா எம்.ஏ, உள்ளிட்ட சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
ஞான முருகன் என்பவரை திருமணம் செய்த ரேவதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாக அட இவரா ரேவதி என ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.

ஒரு சார்ஜில் 165 கிமீ தூரம் செல்லும் - Jindal Mobilitric R40 மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் News Lankasri
