பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வீட்டில் நடந்த கொண்டாட்டம்.. அவர் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி! என்ன தெரியுமா?
பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் மாலினி கேரக்டரில் நடிகை ரேமா அசோக் நடித்து வருகிறார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி, காதல் முதல் கல்யாணம் வரை மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார் புறம் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த பாக்கியலட்சுமி சீரியலில் மாலினி ரோலில் வில்லியாக, செழியனை ஒருதலையாக காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார்.
ரேமா வீட்டில் நடந்த கொண்டாட்டம்
இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய காட்சிகள் அதிகமாக சீரியலில் இல்லை. அதைத்தொடர்ந்து, ரேமா சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவருடைய அம்மா மற்றும் அண்ணன் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது, ரேமாவின் அண்ணன் ரேமாவிற்கு ஒரு மோதிரத்தை பரிசு கொடுத்து இருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து அதற்கு ஒரு கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.
அதில், என்னுடைய அண்ணன் எனக்கு எப்போதும் ஒரு கலங்கரை விளக்கு. என் அண்ணன் தந்த பரிசு அளவிலாத பொக்கிஷம் எனவும். ஒவ்வொரு நாளும் என் இதயம் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் அன்பாலும் பாராட்டுகளாலும் நிறைந்து உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இந்த அழகான தங்க மோதிரம் தந்ததற்கு நன்றி என்றும் அந்த பதிவில் கூறி இருக்கிறார். மேலும், ரோமாவிற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
