தனது மகளுடன் கியூட்டான விளம்பரத்தில் நடித்துள்ள சீரியல் நடிகை ரித்திகா.. வீடியோவுடன் இதோ
ரித்திகா
தமிழ் சின்னத்திரையில் ஒரு சீரியலில் தரமான கதாபாத்திரத்தில் நடித்தாலே போதும் அவர்களுக்கு மக்களிடம் பெரிய அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரித்திகா.
அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறியவர் பின் ஜீ தமிழ் பக்கம் சென்றவர் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பே வெளியேறினார்.
குழந்தை
சீரியலில் இருந்து விலகியிருந்தவர் திடீரென தனது திருமண அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின் அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.
அவ்வப்போது ரித்திகா தனது மகளுடன் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். தற்போது தனது மகளுடன் கியூட்டான விளம்பரத்தில் அவர் நடித்துள்ளார், இதோ வீடியோ,

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
