திருமணம் முடிந்து ஹனிமூன் சென்றுள்ள சீரியல் நடிகை ரித்திகா- எங்கே பாருங்க, புகைப்படத்துடன் இதோ
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் தொலைக்காட்சியின் TRPயை உயர்த்தி வரும் தொடராக இப்போது இருக்கிறது பாக்கியலட்சுமி. விவாகரத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி மிகவும் தைரியமாக தனது குடும்பத்தை வேலை செய்து பார்த்துக் கொண்டு வருகிறார்.
இப்போது காலணி எலெக்ஷனில் வேறு பாக்கியா நிற்க அவருக்கு போட்டியாக ராதிகாவை களமிறக்குகிறார் கோபி. இந்த எலெக்ஷனில் யார் ஜெயிப்பார் என்ற காட்சிகளை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த வாரம் இந்த கதைக்களத்தோடு முடிந்துவிடும் என தெரிகிறது.
ரித்திகா திருமணம்
இந்த தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவருக்கு அண்மையில் மிகவும் சிம்பிளான முறையில் திருமணம், திருமண வரவேற்பு எல்லாம் நடந்தது.
அதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு ஜோடியை வாழ்த்தினார்கள்.
தற்போது திருமணம் முடித்த கையோடு ரித்திகா படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது ஹனிமூன் சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்து அவர் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.