கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகை ரித்திகா... கியூட் போட்டோ
பாக்கியலட்சுமி
விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பியை உச்சத்திற்கு கொண்டு சென்ற ஒரு தொடர் பாக்கியலட்சுமி.
ஒரு இல்லத்தரசியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் இப்போது விறுவிறுப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.
பழனிச்சாமிக்கு பாக்கியாவை திருமணம் செய்துவைக்க அவரது அம்மா மற்றும் அக்கா பேசியதை கேட்டு கோபி கடும் கோபம் அடைகிறார். பாக்கியாவிடம் இதுகுறித்து கேட்டு பெரிய சண்டையே போடுகிறார்.
இதனால் பாக்கியா பழனிச்சாமியின் அம்மா-அக்காவை பார்த்து இதெல்லாம் வேண்டாம் என பேசுகிறார்.
ரித்திகா போட்டோ
இந்த தொடரில் அமிர்தாவாக முதலில் நடித்து வந்தவர் ரித்திகா. கியூட்டாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் திருமணத்திற்கு பிறகு சுத்தமாக நடிப்பை நிறுத்தினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருப்பதை அறிவித்தவர் இப்போது கியூட்டான புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
தனது கணவருடன் கொஞ்சம் கர்ப்பமாக இருக்கும் வயிறு தெரிய அமைந்த அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
