சீரியலில் நடித்து வந்ததால் இத்தனை படங்களை மிஸ் செய்துள்ளாரா நடிகை ரோஷினி- அவரே சொன்ன விஷயம்

Yathrika
in தொலைக்காட்சிReport this article
நடிகை ரோஷினி
விஜய் தொலைக்காட்சியில் ஒருகாலத்தில் டிஆர்பியில் டாப்பில் இருந்தவந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. இந்த தொடரின் மூலம் புதுமுக நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமானவர் ரோஷினி.
இந்த தொடர் பெரிய அளவில் ரீச் பெற்றதற்கு ரோஷினி கதாபாத்திரமும் முக்கிய காரணம் என்றே கூறலாம். தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்திருக்கிறது.
அடுத்தகட்டத்திற்கு செல்ல சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய அவர் குக் வித் கோமாளியில் போட்டியாளராக இருந்து வந்தார், ஆனால் நிறைய நாள் போட்டியில் இல்லை.
மிஸ் செய்த படங்கள்
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் சார்பட்டா பரம்பரை.
இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மாரியம்மா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ரோஷினிக்கு தான் வாய்ப்பு கிடைத்துள்ளது, ஆனால் சீரியலில் அவர் நடித்துவந்ததால் இப்பட வாய்ப்பை மிஸ் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த படம் ஜெய்பீம்.
இப்படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் முதலில் ரோஷனிக்கு தான் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அப்போதும் ஏதோ கதாபாத்திரத்தால் மிஸ் செய்துள்ளார்.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
