புதிய கார் வாங்கியுள்ள பிரபல சீரியல் நடிகை சாய் காயத்ரி... யாருக்காக வாங்கினார் தெரியுமா?
சாய் காயத்ரி
தொகுப்பாளினியாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை சாய் காயத்ரி.
ஜெயா டிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் பிறகு சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்தார்.

2011ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் நடித்தவர் அதன் மூலமாகவே நன்கு ரீச் ஆனார். அதன்பின் சிவா மனசுல சந்தி, ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ், நீ நான் காதல் என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.
தற்போது தொடரை தாண்டி வெப் தொடர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
புதிய கார்
நடிப்பை தாண்டி சாய் காயத்ரி சாய் சீக்ரெட்ஸ் என சோப், ஆயில் போன்ற விஷயங்களை தயாரித்து தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சாய் காயத்ரி ஒரு புதிய கார் வாங்கியுள்ளார், ஆனால் அது அவருக்காக இல்லை. அவரது அம்மா பிறந்தநாள் ஸ்பெஷலாக காரை வாங்கி அவருக்கு பரிசாக கொடுத்துள்ளாராம்.
சாய் காயத்ரியின் இந்த பரிசை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.