உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல் புகழ் நடிகை சாக்ஷி தன்வாருக்கு இத்தனை கோடி சொத்து உள்ளதா?..
உள்ளம் கொள்ளை போகுதடா
படங்களை போல பல மொழிகளில் மக்களிடம் வெற்றிப்பெற்ற சீரியல்கள் தமிழில் ரீமேக் ஆகிறது அல்லது டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது.
கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தி டப்பிங் சீரியல் உள்ளம் கொள்ளை போகுதடா.
காலம் கடந்து வரும் காதல், திருமணம், தம்பதிகளுக்குள் நிகழும் சிக்கல்கள் என குடும்ப கதையை மையப்படுத்தி ஒளிபரப்பான தொடர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த தொடரில் நாயகியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் தான் சாக்ஷி தன்வார்.

சொத்து மதிப்பு
1998ம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றுக்காக தூர்தர்ஷனில் நடைபெற்ற ஆடிஷனுக்கு சென்றுள்ளர், அதில் தேர்வாகி நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் களமிறங்குகிறார்.
அப்படியே சீரியல்கள் பக்கம் வந்தவர் முதலில் கஹானி கர் கர் கி என்ற தொடரில் நடித்து கவனம் பெற்றார். தொடர்ந்து பல சீரியல்கள் நடித்தவர் 2011ல் வெளியான உள்ளம் கொள்ளை போகுதடா தொடரில் நடிக்க பெரிய அளவில் கைகொடுத்தது.

சீரியல்களை தாண்டி ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்த 2018ம் ஆண்டு பிறந்த 9 மாதங்களே ஆன பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
ஆடம்பர செலவு செய்யாமல் எப்போதும் சிம்பிளாக இருக்கும் சாக்ஷி தன்வார் 6 தலைமுறைக்கான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளதாக பேட்டி ஒன்றில் அவருடன் நடித்த நடிகர் ராம் கபூர் தெரிவித்துள்ளார். சாக்ஷி தன்வார் சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
