காஸ்ட்லி பைக்கில் வந்து நடிகையின் செருப்பை திருடிய மர்ம நபர்கள்.. வீடியோவுடன் புகார்
திருட்டு சம்பவங்கள் சென்னையில் அதிகம் நடந்து வரும் நிலையில் சீரியல் நடிகை ஒருவர் தற்போது அளித்திருக்கும் புகார் ஒன்று வைரல் ஆகி இருக்கிறது.
கேகே நகர் பகுதியில் ஒரு பெரிய அபார்ட்மெண்டில் வசித்து வரும் நடிகை சங்கீதா என்பவர் விஜய்யின் மாஸ்டர், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறாராம். மேலும் சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
செருப்பு திருட்டு
நடிகை அவரது வீட்டின் முன் விடும் செருப்பு அடிக்கடி காணாமல் போவதால் சிசிடிவியை ஆராய்ந்து பார்த்திருக்கிறார். அப்போது இரண்டு பேர் வீட்டின் முன் இருக்கும் காலணிகளை லிப்ட் உள்ளே தள்ளிவிட்டு அதன் பின் திருடிக்கொண்டு செல்வது தெரியவந்தது.
அவர்கள் சொகுசு பைக்கில் வந்து திருடியதும் தெரியவந்திருக்கிறது. அந்த CCTV வீடியோவை வெளியிட்டு நடிகை தற்போது போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.
நீச்சல் உடையில் எல்லைமீறிய கவர்ச்சியில் தர்ஷா குப்தா! படுவைரல் ஆகும் ஸ்டில்கள்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
