அதை இப்போவே டெலீட் பண்ணுங்க.. கணவர் வெளியிட்ட வீடியோவால் டென்ஷன் ஆன சீரியல் நடிகை ஷபானா
செம்பருத்தி சீரியல் மூலமாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக மாறியவர் ஷபானா. அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
அதன் பிறகு சன் டிவிக்கு சென்று மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்தார். ஆனால் அதில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். அடுத்து ஷபானா எந்த புது சீரியலில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கணவர் வெளியிட்ட போட்டோ.. ஷபானா ஷாக்
ஷபானா பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் பல வருடமாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில் ஒருகட்டத்தில் திடீரென திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் ஷபானா வீட்டில் எதிர்ப்பு வந்ததாகவும் தகவல் அப்போது வந்தது.
இந்நிலையில் ஆர்யன் தான் ஷபானாவை காதலித்து வந்த போது ரகசியமாக சந்தித்தபோது எடுத்த போட்டோ, வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்த ஷபானா கமெண்டில் 'இப்போவே டெலீட் பண்ணுங்க இதை' என கூறி இருக்கிறார். ஆனாலும் ஆர்யன் இந்த பதிவை நீக்கவில்லை.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri