செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா அவரது காதலனுடன் எடுத்த அழகிய புகைப்படம்- முதன்முறையாக வெளியானது, இதோ
ஜீ தமிழில் ஹிட் சீரியல்களின் வரிசையில் செம்பருத்தி தொடரும் உள்ளது. TRPயில் சாதனை எல்லாம் செய்த இந்த தொடருக்கான பார்வையாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.
எனவே சீரியல் குழுவினர் விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன.
இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஷபானா. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யன் என்பவரை காதலிக்கிறார் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என செய்திகள் வந்தன.
ஆனால் அவர்கள் இருவரும் இருப்பது போல் ஒரு புகைப்படம் கூட வெளியானது இல்லை. தற்போது முதன்முறையாக இருவரும் ஒன்றாக நின்று எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் செம ஜோடி என தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
சீரியல் நடிகர் மதன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தான் இருவரும் எடுத்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri