2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை ஷாமிலி சுகுமார்...
ஷாமிலி
தமிழ் சின்னத்திரையில் தென்றல் சீரியல் மூலம் 20 வயதிலேயே நடிகையாக அறிமுகமானவர் தான் ஷாமிலி சுகுமார்.
பைரவி, பாசமலர், ரோஜா, மாப்பிள்ளை, வள்ளி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இதில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் வில்லியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார்.
நல்ல ஹிட் கொடுத்த அந்த சீரியலில் இருந்து ஷாமிலி திருமணம் ஆகி கர்ப்பமானதால் பாதியிலேயே வெளியேறினார்.

வளைகாப்பு
பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி வெளியானது.

ஷாமிலி குழந்தை பிறந்த பிறகு புதிய வீடு கட்டினார், யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்களில் மிகவும் ஆக்டீவாக வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஷாமிலி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாராம். அதற்கான வளைகாப்பு சிம்பிளாக சமீபத்தில் முடிந்துள்ளது, அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
