சீரியல் நடிகை சித்ராவின் கடைசி நாட்கள், 2 வருடங்கள் பிறகு வந்த தகவல்- நடிகை சரண்யா ஓபன் டாக்

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகை சித்ரா
இவரை தொலைக்காட்சி ரசிகர்கள் எப்போதும் மறக்கவே மாட்டார்கள். அந்த அளவிற்கு தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு முன் சித்ரா பயணிக்காத தொலைக்காட்சி இல்லை. மக்கள் தொலைக்காட்சி, சன், கலைஞர், கலர்ஸ் என பல தொலைக்காட்சிகளில் பணிபுரிந்துள்ளார். கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் விஜய் தொலைக்காட்சிக்கு வந்த அவர் பெரிய அளவில் ரீச் ஆனார்.
சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும போதே ஹேமந்த் என்பவருடன் திருமணம் என்று கூற அனைவரும் வாழ்த்தினார்கள்.
சரண்யா ஓபன் டாக்
நடிகை சித்ரா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது சித்ராவை பற்றி நடிகை சரண்யா சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார். அதில் அவர், சித்ரா என்னிடம் நான் காதலிக்க ஆரம்பித்த பிறகே சீரியலில் ரொமான்ஸ், முதல் இரவு காட்சிகள் வருகின்றன, என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
எனது வருங்கால தான் புரிந்துகொள்ள வேண்டும், ஆனால் பிரச்சனை வருகிறது, இல்லையெனில இனி சீரியலில் அப்படி நடிக்க முடியாது என கூற வேண்டும் என்றார்.
அதோடு அவர்கள் பேசிய ஆடியோவையும் தன்னிடம் காட்டி சித்ரா அழுது புலம்பியதாக சரண்யா தெரிவித்திருக்கிறார்.