திருமணம் ஆகி 1 வருடத்தில் இறந்த கணவர், மறக்க முடியாத நினைவுகள்- காட்டுக்கு சென்றுள்ள சீரியல் நடிகை ஸ்ருதி
ஸ்ருதி ஷண்முகப்பிரியா
சன் டிவியில் மெட்டி ஒலி என்ற தரமான தொடரை இயக்கிய திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த இன்னொது சிறப்பான தொடர் நாதஸ்வரம்.
இந்த தொடரில் அமோகமாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த ஸ்ருதி அடுத்தடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.
இவருக்கு கடந்த ஆண்டு மே மாதம் அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் நடிப்பதையே நிறுத்திய ஸ்ருதி தனது கணவருடன் சுற்றுலா அதிகம் சென்றுள்ளார், அந்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.
சந்தோஷமாக இவர்கள் வாழ்ந்து வர திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அரவிந்த் சேகர் உயிரிழந்துவிட்டார்.
ஸ்ருதியின் வீடியோ
கணவரின் உடல் மட்டும் தான் இல்லை ஆனால் அவரது ஆத்மா என்னுடன் தான் உள்ளது என கூறி வந்த ஸ்ருதி அந்த பெரிய இழப்பில் இருந்து வெளியே வர இயற்கையின் துணையை தேடியிருக்கிறார்.
அவர் அண்மையில் காட்டுக்குள் சென்று அவர் அவர் வீடியோ, புகைப்படங்கள் எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.