பரபரப்பாக பேசப்படும் விவாகரத்து விஷயம், உண்மையை கூறிய சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா... பளீச் போட்டோ
கேப்ரியல்லா
கருப்பாக இருந்தால் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது என்கிற பிம்பம் இப்போது இல்லை.
சன் டிவியில் சுந்தரி சீரியல் கேப்ரியல்லா, விஜய் டிவியில் வினுஷா, ரோஹினி, ஜீ தமிழில் கார்த்திகை தீபம் நாயகி போன்றோர் அந்த பிம்பத்தை உடைத்து இந்த கலரில் இருந்தாலும் சாதிக்கலாம் என்பதை காட்டியுள்ளனர்.
விவாகரத்து
சமீபத்தில் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ்.
நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ள இவரின் சொந்த விஷயம் குறித்து ஒரு தகவல் வைரலாகி வந்தது.
அதாவது கேப்ரியல்லா செல்லஸ் தனது கணவர் சுருளியை விவாகரத்து செய்துவிட்டதாக நிறைய செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் அவரது தரப்பில் இருந்து உண்மை என்ன என்று எந்த செய்தியும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் சீரியல் நடிகை சுந்தரி விவாகரத்து குறித்து பரவும் தகவலுக்கு ஒரே ஒரு புகைப்பட பதிவு மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதாவது அவர் தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோவை வெளியிட்ட விவாகரத்து எல்லாம் கிடையாது என்பதை பளீச் என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

திருமணம் செய்து 4 வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்த சாஹல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! IBC Tamilnadu
