திருமணத்தில் விருப்பமே இல்லை, வீட்டில் கட்டாயப்படுத்தியதால் ஒப்புக்கொண்டேன்- முதல்முறையாக ஓபனாக பேசிய சீரியல் நடிகை ஸ்ரீஜா
செந்தில்-ஸ்ரீஜா
திரையில் நாம் பார்த்து ரசித்த ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் இணைந்தால் அவர்களை தாண்டி அதிகம் சந்தோஷப்படுவது ரசிகர்கள் தான்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் கொண்டாடும் ஜோடியாக வலம் வந்தவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா.
இவர் 2014ம் ஆண்டு ரியல் ஜோடியாக மாறினார்கள், திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது செந்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடரில் நடித்து வருகிறார்.
ஸ்ரீஜா ஓபன் டாக்
சமீபத்தில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் ஒரு பேட்டி கொடுத்திருந்தனர்.
அதில் ஸ்ரீஜா பேசும்போது, செந்திலுடன் திருமணம் நடப்பதற்கு முன்பு பெற்றோர் பார்த்த வரனுடன் நிச்சயம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் பெண் பார்க்க வந்தபோதே எனக்கு விருப்பம் இல்லை.
அக்கா, அம்மா கட்டாயப்படுத்தியதால் அந்த திருமணத்திற்கு ஓகே சொன்னேன். இந்த விஷயத்தை எனது தோழி கூறியதால் இவரிடம் சொன்னேன். கல்யாணம் என்கிறீர்கள் ஏன் சந்தோஷம் இல்லை என இவர் கேட்டதும் எனக்கு விருப்பம் இல்லை என்பதை கூறினேன்.
இவர் உடனே கல்யாணம் பிடிக்கவில்லை என்றால் வீட்டில் சொல்லுங்கள் என தைரியம் கொடுத்தார். பின் பிடிக்காத திருமணம் குறித்து வீட்டில் தைரியமாக பேசினேன், அதற்கு பிறகு செந்திலுடன் பேச ஆரம்பித்தேன்.
அப்போது தான் இவரை திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது உட்னே நான் தான் காதலை சொன்னேன், பிறகு அவர் ஓகே சொல்ல திருமணமும் நடந்தது என கூறியுள்ளார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
