கார் இல்லை, சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் வாங்கியுள்ள புதிய பொருள்.. என்ன பாருங்க, வீடியோ
ஸ்ரீதேவி அசோக்
தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பின் சின்னத்திரை பக்கம் வந்தவர் தான் ஸ்ரீதேவி அசோக்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் கடந்த 17 வருடங்களாக சன், கலைஞர், ஜெமினி, ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் போன்ற பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
தங்கம், இளவரசி, கல்யாண பரிசு, நிலா போன்ற சீரியல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் விஜய்யில் ஒளிபரப்பாகும் பொன்னி தொடரில் நடித்து வருகிறார்.
புதிய ஸ்கூட்டி
அசோக் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரீதேவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சின்னத்திரை பிரபலங்கள் எல்லோரும் புதிய கார்கள் வாங்கி அசத்த நடிகை ஸ்ரீதேவி இப்போது பைக் வாங்கியுள்ளார். இதோ அந்த வீடியோ,