கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவருடன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்ரீதேவி- ஆச்சரியமாக பார்க்கும் ரசிகர்கள்
சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் இப்போது மவுசு அதிகம்.
அன்றாடம் தொலைக்காட்சிகளில் நடிகைகளை பார்ப்பதால் என்னவோ ரசிகர்கள் அதிகம் ஆகிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் சீரியல் நடிகைகள் இன்ஸ்டா பக்கத்தில் படு ஆக்டீவாக இருக்கின்றனர்.
எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி அசோக். சன் டிவி சீரியல்களில் முதலில் நடிக்க ஆரம்பித்த அவர் பின் விஜய், ஜெயா, ஜெமினி, ஜீ தமிழ் என மாறி மாறி பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார்.
இதுவரை அவர் 25 சீரியல்கள் நடித்துள்ளார், 2 படங்களில் நடித்திருக்கிறார்.
அண்மையில் இவர் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், கணவருடன் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களையும் இன்ஸ்டா பதிவு செய்திருந்தார். ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்கு மனதார வாழ்த்து கூறினார்கள்.
கர்ப்பமாக இருக்கும் இந்த வேலையில் நடிகை ஸ்ரீதேவி தனது கணவருடன் நடனம் ஆடியுள்ளார்.
அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் லைக்ஸ் கொடுத்து வருகிறார்கள்.