சிம்புவுக்கு வெளிப்படையாக ப்ரொபோஸ் செய்த பிரபல சீரியல் நடிகை! ஏற்றுக்கொள்வாரா STR?
நடிகர் சிம்புவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. அவருக்கு எப்போது திருமணம் ஆகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். அவரது பெற்றோரும் அது பற்றி தொடர்ந்து மீடியாவில் பல முறை வருத்தமாக பேசி இருக்கின்றனர்.
சிம்பு இதற்கு முன்பு நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை காதலித்து இருந்தாலும் அது பிரேக்கப்பில் தான் முடிந்தது. இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதி இன்ஸ்டாகிராமில் சிம்புவுக்கு லவ் ப்ரோபோசல் செய்து இருக்கிறார்.
"ஒருவேளை சிம்புவையே கரெக்ட் பண்ணிடுவாளோ என நினைப்பவர்களுக்கு, நடக்கலாம்.. வாய்ப்புகள் இருக்கு."
"சிம்பு.. நீங்களும் சிங்கிள், நான் கூட சிங்கிள். உன்னையும் எல்லாரும் பிளே பாய்னு சொல்றாங்க. என்னையும் எல்லாரும் பிளே கேர்ள்னு சொல்றாங்க. உண்மையா லவ் பண்ணா அப்படிதான் சொல்லுவாங்க. நீ வேணும்னா என்கிட்டே வந்துடு, நான் உன்னை பாத்துக்கிறேன் பத்திரமா" என ஸ்ரீநிதி குறிப்பிட்டு இருக்கிறார்.