என் பிறந்தநாளுக்கு அரவிந்த் அப்படி செய்தார்... மறைந்த கணவர் குறித்து சீரியல் நடிகை ஸ்ருதி
நடிகை ஸ்ருதி
சன் டிவியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது, அதில் ஒன்று நாதஸ்வரம் சீரியல்.
இந்த சீரியல் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் தான் நடிகை சண்முகப்பிரியா. அந்த சீரியலை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு, விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து பிரபலமானார்.
இவர் முதன்முதலாக நடித்த நாதஸ்வரம் சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது. தற்போது சண்முகப்பிரியா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

காந்தாரா Chapter 1 கிளைமேக்ஸ் படப்படிப்பில் ரிஷப் ஷெட்டிக்கு ஏற்பட்ட கஷ்டம்... போட்டோவுடன் வெளியிட்ட பிரபலம்
பேட்டி
இவர் 2022ம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2022ம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் 2வது இடம் பிடித்திருந்த இவர் திருமணமாகி ஒரு வருடத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரின் ஆன்மாவுடன் தான் பேசிக்கொண்டு இருப்பதாகவும் அதுதான் தன்னை பாதுகாப்பதாகவும் ஸ்ருதி தெரிவித்திருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் ஸ்ருதி பேசும்போது, எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததும் எனக்கு பிறந்தநாள் வந்தது.
அப்போது அவன் எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க என் கண்னை டாட்டூவாக அவர் கையில் போட்டுக் கொண்டார், இத்தனைக்கு அவருக்கு ஊசி என்றால் பயம்.
அதைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது என்றாலும் என் கண்ணில் 2 மச்சம் இருக்கிறது, அது டாட்டூவில் இல்லை, அப்படி என்றால் இது என் கண் என்று எப்படி தெரியும், மச்சத்தை போட்டு வா என்றேன்.
இவ்வளவு பண்ணிருக்கேன், உனக்கு அந்த மச்சம் தான் முக்கியமாக என கோபப்பட்டான், அது மறக்க முடியாத விஷயம் என கூறியுள்ளார்.