பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகைக்கு திடீரென நிச்சயதார்த்தம் முடிந்தது- யாரு மாப்பிள்ளை பாருங்க
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.
பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, நம்ம வீட்டு பொண்ணு என 3 தொடர்கள் ஒளிபரப்பாகிறது, இந்த 3 தொடர்களையும் பிரவீன் பென்னட் தான் இயக்கி வருகிறார்.
இதற்கு முன் குளோபல் வில்லேஜர்ஸ் மற்றும் பிரவீன் இயக்கத்தில் பொம்மகுட்டி அம்மாவுக்கு என்ற தொடரும் ஒளிபரப்பானது, ஆனால் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.
இந்த பொம்மகுட்டி அம்மாவுக்கு மற்றும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்தவர் நடிகை ஸ்ருதி. இவர் நடித்த ஒரு தொடர் முடிந்தே விட்டது, பாரதி கண்ணம்மாவில் இவரை கதாபாத்திரம் பற்றிய பேச்சே இல்லை, அப்படியே நிறுத்திவிட்டார்கள்.
சீரியல்களில் இவர் காணாமல் போனாலும் ஸ்ருதி குறித்து ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால் வக்கீலாக இருக்கும் அரவிந்த் என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
நிச்சயதார்த்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகையே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்துள்ளார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
