திடீரென மாரடைப்பால் இறந்த தனது கணவர் குறித்து நாதஸ்வரம் சீரியல் நடிகை ப்ரியா போட்ட எமோஷ்னல் பதிவு- சோகத்தின் உச்சம்
ஸ்ருதி ப்ரியா
தமிழ் சினிமாவில் நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா என சில தொடர்கள் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர் நடிகை ஸ்ருதி ப்ரியா. இவருக்கு கடந்த ஆண்டு பாடி பில்டர் அரவிந்த் சேகர் என்பவருடன் திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்தி இருந்த ஸ்ருதி தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அதிகம் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
தனது கணவருடன் இணைந்து நிறைய ரீல்ஸ் வீடியோ வெளியிடுவார், ரசிகர்களும் அதிக லைக்ஸ் குவித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் ஸ்ருதியின் கணவர் அரவிந்த் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
நடிகையின் பதிவு
நடிகையின் கணவர் இறப்பு செய்தி குறித்து தகவல் வர ரசிகர்கள் கடும் சோகத்தில் இருந்தனர். இந்த நிலையில் ஸ்ருதி தனது இன்ஸ்டாவில் கணவர் குறித்து எமோஷ்னல் பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், உன் உடல் மட்டும் தான் பிரிந்துள்ளது. ஆனால் உன் ஆன்மாவும், மனமும் என்னைச் சூழ்ந்து இப்போதும் மட்டுமல்லாமல் என்றென்றும் என்னை பாதுகாக்கும்.
உங்கள் மீதான என் அன்பு இப்போது மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. நாங்கள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நிறைய நினைவுகளை வைத்திருந்தோம். அதை நான் வாழ்நாள் முழுவதும் மதிக்கிறேன்.
உன்னை மிஸ் பண்றேன். மேலும் உன்னை நேசிக்கிறேன் அரவிந்த்! என் அருகில் உன் இருப்பை உணர்கிறேன் என பதிவு போட்டுள்ளார்.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங்- உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா?

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
