ஸ்பெஷல் தினத்தை கொண்டாடியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா தனுஷ்- அழகிய புகைப்படம்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியில் கடந்த 5 வருடங்களுக்கு மேல் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன்-தம்பிகள் பாசம், கூட்டுக் குடும்பம் என இப்போது உள்ள குடும்பங்கள் மறந்த சில வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை தொடர் காட்டி வந்தது.
வரும் அக்டோபர் 30ம் தேதியோடு இந்த தொடர் முடிவுக்கு வந்த தொடர்ந்து அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் பாகம் ஒளிபரப்பாக இருக்கிறது. 2ம் பாகத்தின் புரொமோக்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.
சுஜிதா போட்டோஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரசிகர்கள் கொண்டாடும் அண்ணியாக நடித்தவர் தான் சுஜிதா தனுஷ். இவர் அண்மையில் தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இந்த சந்தோஷ செய்தியை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.