புதிய கார் வாங்கியுள்ள மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி கொன்டே.. இதோ அவர் வெளியிட்ட போட்டோ
ஸ்வாதி கொன்டே
தமிழ் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகள் பலர் உள்ளார்கள்.
அதில் ஒருவர் தான் நடிகை ஸ்வாதி கொன்டே, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ஸ்வாதி கொன்டே.
அந்த தொடருக்கு பிறகு ஸ்வாதி கார்த்தி-அரவிந்த் சாமி நடித்த மெய்யழகன் படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு படத்தில் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.
புதிய கார்
எல்லா நாயகிகளை போல இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஸ்வாதி அண்மையில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
தனது அப்பா-அம்மாவுடன் சென்று காரை வாங்கியிருக்கிறார், அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.