மூன்று முடிச்சு சீரியல் நடிகை ஸ்வாதி இதுவரை இத்தனை படங்கள் நடித்துள்ளாரா?... யாருக்கெல்லாம் தெரியும்
மூன்று முடிச்சு
சன் டிவியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் மூன்று முடிச்சு.
பணக்காரராக இருக்கும் ஒரு தொழிலதிபர் சூர்யாவுக்கும் அவரது வீட்டில் வேலை செய்த நந்தினி என்ற பெண்ணுக்கும் எதிர்ப்பாரா விதமாக திருமணம் நடக்க அதை வைத்து கதை நகர்ந்து வருகிறது.

நந்தினி நிம்மதியாக தீபாவளி கொண்டாடி கூடாது என அவரை பழிவாங்குவதாக நினைத்து சூர்யாவின் அக்கா ஒரு வேலை செய்ய அதனால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சூர்யாவின் உடம்பில் பட்டாசு பட்டதால் அவர் நடக்க முடியாமல் சிகிச்சைக்கு பிறகு படுத்த படுக்கையாக உள்ளார்.
விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இந்த சீரியலில் நந்தினியாக நடித்துவரும் ஸ்வாதி கொண்டேவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

படங்கள்
இந்த தொடருக்கு முன் ஸ்வாதி விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து கவனம் பெற்றார்.

இதற்கு இடையில் நடிகர் கார்த்தியின் மெய்யழகன் படத்தில் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது.
ஸ்வாதி தனது சினிமா பயண ஆரம்பமே படங்கள் மூலம் தான் தொடங்கியுள்ளார். அவர் கன்னடத்தில் கடந்த 2017ம் ஆண்டு Beautiful Manasugalu என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதன்பின் Kamarottu Checkpost, Vanilla, Kattu Kathe படங்களில் நடித்தவர் மலையாளத்தில் Pavi Caretaker என்ற படத்திலும் நடித்துள்ளார்.