20 வயதில் திருமணம், பணம் நகை மோசடி, தகுதியற்றவர்... சின்ன மருமகள் சீரியல் நடிகை அதிர்ச்சி பதிவு

By Yathrika Mar 31, 2026 01:58 PM GMT
Report

சின்ன மருமகள்

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் சின்ன மருமகள். 

இப்போது கதையில் சேது, தமிழ்ச்செல்வி மீது சந்தேகப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற கூற பெரிய சம்பவம் நடக்கிறது. அதாவது தமிழ்ச்செல்வி, போதும் யா உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை. 6 மாதத்திற்கு ஒருமுறை நான் நல்ல பெண் என நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

20 வயதில் திருமணம், பணம் நகை மோசடி, தகுதியற்றவர்... சின்ன மருமகள் சீரியல் நடிகை அதிர்ச்சி பதிவு | Serial Actress Swetha About Her Marriage Life

நீ என்ன என்னை வெளியே போகச்சொல்வது நான் இப்போது சொல்கிறேன், எனக்கும் இந்த குடும்பத்திற்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை இது சத்தியம் என கூறிவிட்டு செல்கிறார். 

சின்ன மருமகள் சீரியலின் கதைக்களம் பரபரப்பாக செல்ல தற்போது அதில் நடிக்கும் ஒரு நடிகையின் நிஜ வாழ்க்கை குறித்த பரபரப்பு தகவல் பரவுகிறது.

20 வயதில் திருமணம், பணம் நகை மோசடி, தகுதியற்றவர்... சின்ன மருமகள் சீரியல் நடிகை அதிர்ச்சி பதிவு | Serial Actress Swetha About Her Marriage Life

ஸ்வேதா

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் புகழ் தாமரைச்செல்வி, சின்ன மருமகள் சீரியலில் தமிழ்ச்செல்வியாக நடிக்கும் ஸ்வேதாவின் கணவருக்கு பண உதவி செய்தேன், ஆனால் அவர் மோசடி செய்துவிட்டார்.

பின்னாளில் தான் அவர் மிகவும் மோசமானவர், இதையே வழக்கமாக வைத்து நிறைய விஷயங்கள் செய்துள்ளார் என பரபரப்பு வீடியோ வெளியிட்டார்.

20 வயதில் திருமணம், பணம் நகை மோசடி, தகுதியற்றவர்... சின்ன மருமகள் சீரியல் நடிகை அதிர்ச்சி பதிவு | Serial Actress Swetha About Her Marriage Life

இந்த நிலையில் நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாவில், நான் முன்பே கூறியபடி, நாங்கள் காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டோம். அப்போது எனக்கு வெறும் 20 வயது தான். மிகவும் அனுபவமில்லாத வயது என்பதால், அவரைப் பற்றிய பல விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயின. காலப்போக்கில் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன.

20 வயதில் திருமணம், பணம் நகை மோசடி, தகுதியற்றவர்... சின்ன மருமகள் சீரியல் நடிகை அதிர்ச்சி பதிவு | Serial Actress Swetha About Her Marriage Life

அவர் தன்னிடம் ஒரு வழக்கு இருப்பதாக கூறினார். அதை சரி செய்யலாம் என்ற நம்பிக்கையில், அந்த வழக்கிற்காக நான் அதிகளவில் செலவழித்தேன். ஆனால் பின்னர் தான் அவர் கூறிய அனைத்தும் பொய்யானது என்று புரிந்தது.

மேலும் அவருக்கு பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனால் இந்த உறவை தொடர முடியாது என்று நான் தெளிவாக முடிவு செய்தேன். அதன் பிறகு அவருடைய உண்மையான முகம் வெளிப்பட்டது. நான் அவரை விட்டு விலகி என் குடும்பத்துடன் திரும்பி சேர்ந்தேன் என அதிர்ச்சி விஷயங்கள் பதிவு செய்துள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US