என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ
சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா. அவரது கணவர் என கூறிக்கொண்டு ஆதி என்ற ஒருவர் பேட்டிகள் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
அது பற்றி ஸ்வேதா கண்ணீருடன் பேசி இருக்கிறார்.
அவ்ளோ கோவம், அவ்ளோ வலிக்குது. பைத்தியம் பிடித்தது போல இருக்கிறது. நான் ஆதி என்ற ஒருவனை லவ் பண்ணேன், ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணேன். எல்லோரையும் கூப்டு வெச்சி எல்லாம் திருமணம் செய்யல. வீட்டை விட்டு வந்துவிட்டேன்.
அவனுக்காக என் பெற்றோர், குடும்பம், தம்பி, நண்பர்கள் என எல்லோரையும் விட்டு போய்விட்டேன். அவன் ஒரு ஆளை நம்பி போய்விட்டேன்.
அதற்கு முன்பே 'நான் பிஸ்னஸ் பண்ண போறேன்' என சொன்னேன். நஷ்டம் ஆகிவிட்டது என அடிக்கடி சோகமாக வருவான். அவன் பேசினது எல்லாம் நம்பி, நான் பைத்தியக்காரன் மாதிரி போட்டிருந்த நகைகளை எல்லாம் அவனுக்கு கொடுத்துவிட்டேன். இதெல்லாம் காலேஜ் படிக்கும்போதே நடந்தது.

வீட்டில் பொய் சொல்லி சமாளித்தேன். உண்மை தெரிந்தபிறகு அவனை அழைத்து வீட்டில் எச்சரித்து அடித்தார்கள். நானும் அவனுக்காக அடிவாங்கினேன். அதை எல்லாம் விற்றுவிட்டேன் என சொன்னான். நான் காலேஜ் 1st year தான் படித்து கொண்டிருந்தேன். இப்போதே நகையை வாங்கி ஏமாற்றுகிறான், அவன் வேண்டாம் என எவ்வளவோ சொன்னார்கள். நான் கேட்கவில்லை.
நம்மை பிரித்துவிடுவார்கள், ஒரு சைன் போட்டால் போதும் என சொன்னான். அதை கேட்டு நான் வாழ்க்கையில் பெரிய தப்பு செய்துவிட்டேன். அது பற்றி தற்போது ஒவ்வொரு நொடியும் வருத்தப்படுகிறேன்.
அவன் வீட்டிலும் என்னை சேர்த்துக்கொள்ளவில்லை. சாப்பிடாம தூங்காம, உடையை கூட மாற்றாமல் பல நாள் சுற்றிக்கொண்டிருந்தோம்.
அதன் பின் அவன் வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவன் வேலைக்கு போகவில்லை. அங்கு அவர்கள் வீட்டில் சும்மா சாப்பிட பிடிக்கவில்லை. சென்னைக்கு போய்விடலாம் என கூறி அழைத்து வந்துவிட்டேன்.
10 வகுப்பில் இருந்தே மாடலிங், வெப் சீரிஸ் என நடித்து கொண்டிருந்தேன். சென்னை வந்தபிறகு தான் சீரியல் வாய்ப்பு வந்தது. சின்ன மருமகள் சீரியலில் கஷ்டப்பட்டு நடித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் ஒருத்தி வேலைக்கு போனதால் தான் வீட்டை பார்த்துக் கொண்டேன். நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் உனக்கு தான் கொடுத்தேன். உன் மீது கேஸ் இருக்கிறது என சொன்னதால் அதற்காக கடன் வாங்கி செலவு செய்தேன். உன்னை லவ் பண்ணதால் தற்போது கோர்ட்டுக்கு அலைந்துகொண்டிருக்கிறேன்.
உன்னை பற்றிய உண்மை தெரிந்தபிறகும் இன்னும் எத்தனை பேரை ஏமாத்திட்டு இருக்க. நீ என்ன தைரியத்தில் சுத்துரா, ஒரு நாள் மாட்டுவனு தெரியதா.
என்னை சமாதானப்படுத்த கூட நீ பேசவில்லை. உன் குடும்பத்தையும் அவ்ளோ நம்புனேன். நீ எல்லாம் மனுஷனே கிடையாது. Interview கொடுத்துட்டு இருக்க.
எனக்கு உன்னை புடிக்கல. இப்படி ஒரு கேவலமான ஜென்மம் எனக்கு தேவையில்லை. என்ன பண்ண முடியுமோ பண்னு, நான் பாத்துக்கிறேன்.
என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எதாவது பண்ணிப்பனோ என இருக்கு. அப்படி சைக்கோ போல எல்லாம் செய்கிறாய். நான் mentally பாதிக்கப்படுகிறேன். நீ எல்லாம் மனுஷனே கிடையாது.
எனக்கு எதாவது ஆனால் அதற்கு அவன் மட்டும் தான் காரணமாக இருப்பான் என எல்லோருக்கும் சொல்கிறேன்.
இவ்வாறு ஸ்வேதா கடும் கோபமாக பேசி இருக்கிறார்.
You May Like This Video
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan