புதிய கார் வாங்கியுள்ள சின்ன மருமகள் சீரியல் நாயகி ஸ்வேதா... புகைப்படங்கள் இதோ
சின்ன மருமகள்
நன்றாக படித்து மருத்துவர் ஆகி மக்களுக்கு இலவச சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட தமிழ்ச்செல்வி என்ற பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சின்ன மருமகள்.

இப்போது கதையில் சேதுபதி ஒரு இலவச கண் மருத்துவ முகாம் நடத்தினார், அதில் ஈஸ்வரி ஒரு சூழ்ச்சி செய்ய அதனால் பிரச்சனை வெடித்துள்ளது. முகாமில் கண்ணில் சொட்டு மருந்து போட்டுக்கொண்ட அனைவருக்கும் கண் பிரச்சனை வந்துள்ளது.
இதனால் சேது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய கார்
சீரியல் கதைக்களம் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் இதில் நாயகியாக நடிக்கும் ஸ்வேதா ஒரு சந்தோஷ செய்தி வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகை ஸ்வேதா தனது சொந்த உழைப்பில் புதியதாக கார் வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதோ அவரது பதிவு,