சீரியல் நடிகை வைஷாலி தனிகாவிற்கு குழந்தை பிறந்தது... போட்டோவுடன் இதோ
வைஷாலி
லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, முத்தழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்து தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் வைஷாலி தனிகா.
கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாநதி சீரியலில் வெண்ணிலாவாக நடித்து வந்தார். சின்னத்திரை தாண்டி சங்கிலி புங்கிலி கதவ தொற, காதல் கசக்குதய்யா, கடுகு, பா.பாண்டி, சர்க்கார் போன்ற படங்களிலும் நடித்து வந்தார்.
சீரியல்கள் படங்கள் நடிப்பதை தாண்டி வைஷாலி நிறைய போட்டோ ஷுட்டும் செய்து பிஸியாக இருந்தார்.

சன் டிவி மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கானின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?... போட்டோவுடன் இதோ
குழந்தை
இவர் தனது நீண்டநாள் காதலர் சத்யதேவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்கள்.
இந்த நிலையில் சீரியல் நடிகை வைஷாலி தனிகாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது, அவரது இன்ஸ்டாவில் இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.