புதிய தொழிலை தொடங்கியுள்ள பிரபல சீரியல் நடிகை வைஷாலி... வீடியோவுடன் இதோ
நடிகை வைஷாலி
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நாயகன் தங்கையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை வைஷாலி, மாப்பிள்ளை சீரியலில் ஸ்ரீஜாவின் தங்கையாக நடித்தார். மேலும் ஆனந்த ராகம், மகாநதி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அதேபோல் விஜய் நடித்த பைரவா, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, பிரபுதேவா நடித்த யங் மங் சங் ஆகிய படங்களில் நடித்தார்.
காதல் கசகுதய்யா, கடுகு, சர்கார், சீமராஜா உள்ளிட்ட படங்களிலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார்.

புதிய தொழில்
நடிகை வைஷாலி பிஸியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது 2021ம் ஆண்டு தான் காதலித்த சத்யதேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஷாக் தேவ் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் வைஷாலி தனது கணவருடன் இணைந்து Creamencreamy என்ற கடையை திறந்துள்ளார். தனது புதிய கடையின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan
இரண்டு உலகளாவிய அச்சுறுத்தல்கள்... உணவுப் பொருட்களின் விலை உயரும்: எச்சரிக்கும் JPMorgan News Lankasri