சீரியல் நடிகை வைஷ்ணவி அருள்மொழியின் பியூட் டிப்ஸ்- என்னவெல்லாம் செய்கிறார் தெரியுமா?
வைஷ்ணவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி.
அந்த தொடருக்கு பிறகு விஜய்யில் இருந்து அப்படியே ஜீ தமிழ் பக்கம் சென்றார். அங்கு பேரன்பு என்ற தொடரில் முன்னணி நாயகியாக நடித்து வந்தவர் இப்போது அதே டிவியில் புதிய தொடரில் நடிக்கிறார்.
சீரியலை தாண்டி வைஷ்ணவி சபாபதி, வீரா போன்ற படங்களில் நடித்தார்.
பியூட்டி டிப்ஸ்
இவர் அண்மையில் ஒரு பேட்டியில் சரும பராமரிப்பு குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அரிசி மாவு, மஞ்சள் மற்றும் தயிர் சேர்ந்து ஃபேஸ் பேக் தடவுவாராம், இதனால் சருமத்தில் கருமை கொஞ்சம் கொஞ்சமாக நீங்குமாம்.
செக்கில் வாங்கிய எண்ணெய்யில் செம்பருத்தி, கருவேப்பிலை, மருதாணி, வெங்காயம், கற்றாழை, வெந்தயம் சேர்ந்து அதை காய வைத்து தலைமுடி பராமரிப்புக்கு பயன்படுத்துவதாக பகிர்ந்துள்ளார்.
முகப்பரு வந்தால் கிராம்பை அரைத்து தேனில் கலந்து முகத்தில் பூசுவது நல்ல பலனை தருவதாக தெரிவித்துள்ளார். முடி உதிர்வு பிரச்சனைக்கு கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அதை தலையில் தடவ கூறியுள்ளார்.
தோல் பராமரிப்புக்கு கற்றாழை மற்றும் பப்பாளி முகத்தில் பூசுவேன் என தெரிவித்துள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
