சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ்
சிறகடிக்க ஆசை
ஒரு கலைஞனுக்கு சினிமாவில் நுழைந்த உடனே பெரிய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.
அப்படி சின்ன சின்ன பாடல், குறும்படம் என நடித்து மக்களின் கவனத்தை பெற முயற்சி செய்தவர் தான் வெற்றி வசந்த்.
அவரின் உழைப்பிற்கு ஏற்றவாரு விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் வாய்ப்பு கிடைக்க இப்போது பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார், அவரது நடிப்பும் நன்றாக தான் உள்ளது.

இவர் ராஜா ராணி, பொன்னி என பல சீரியல்கள் நடித்த வைஷ்ணவியை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இருவரும் அவ்வப்போது ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
குட் நியூஸ்
இந்த நேரத்தில் வைஷ்ணவி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார். உடனே எல்லோரும் வைஷ்ணவி-வெற்றி வசந்த் கர்ப்பமாக இருக்கிறார்களா என யோசிப்பார்கள், ஆனால் அதுதான் இல்லை.
அதாவது நடிகை வைஷ்ணவி She e o என்ற காஸ்டியூம் டிசைன் தொழிலை தொடங்கியுள்ளாராம். அந்த தகவலை வைஷ்ணவி மற்றும் வெற்றி வசந்த் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
