தொலைக்காட்சியே செய்த அவமானம், சக போட்டியாளர் உருவ கேலி- பிக்பாஸ் பிறகு வினுஷா செய்தது என்ன
பிக்பாஸ் 7
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நிறைய கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது.
அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டால் நமக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும், நமது திறமையை நிகழ்ச்சியில் வெளிக்காட்டி வாழ்க்கையில் முன்னேறலாம் என நினைக்கிறார்கள்.
ஆனால் நிகழ்ச்சி அனைவருக்குமே நல்ல வரவேற்பு கொடுக்கிறதா என்றால் சந்தேகம் தான்.
அட பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கோபி என்ன இப்படியொரு கெட்டப் மாறிவிட்டார்- லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
யாராக இருந்தாலும் காட்ட வேண்டிய இடத்தில் திறமையை வெளிக்காட்டினால் தான் முன்னேற முடியும். இப்போது 7வது சீசன் வெற்றிகரமாக 18 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த வாரம் இந்நிகழ்ச்சியில் இருந்து வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேறினார்கள், பின் 5 பேர் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்தார்கள்.
என்ன ஆனார் வினுஷா
பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரபலங்கள் அனைவருமே தனது இன்ஸ்டாவில் எதாவது பதிவிடுவார்கள், ஆனால் வினுஷா இதுவரை எந்த பதிவும் போடவில்லை.
பாரதி கண்ணம்மா தொடர் மூலம் பெரிய அளவில் ரீச் ஆன வினுஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வளவாக வெளியே தெரியவே இல்லை. அதோடு வீட்டிற்குள் இருந்தபோது நிக்சன் அவரை உருவ கேலி செய்தார் என்றெல்லாம் வீடியோ வெளியாகி இருந்தது.
தொலைக்காட்சியும் இவர் வெளியேறியபோது ஒரு புகைப்படம் போட்டிருந்தது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்த பின் நீக்கி இருந்தார்கள்.
இதுவரை வினுஷா எதுவும் பேசாமல் இருக்க காரணம் உடல்நிலை சரியில்லையா, இல்லை நிகழ்ச்சியில் நடந்ததை பார்த்ததால் மன உளைச்சலில் இருக்கிறாரா என அவரது ரசிகர்கள் நிறைய கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.